இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 1,32,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,94,39,989 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 1,32,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,80,43,446 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் சிகிச்சைப் பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 3,303 உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 3,70,384 ஆக பதிவாகியிருக்கிறது. 25,31,95,048 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரா துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







