ஆவின் பாலகத்தில் வேறு பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர்

 ஆவின் பாலகத்தில் வேறு பொருட்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.  தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் சித்தோடு ஆவின் பால் பண்ணையில் இன்று ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…

 ஆவின் பாலகத்தில் வேறு பொருட்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் சித்தோடு ஆவின் பால் பண்ணையில் இன்று ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனோ காலத்திலும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சென்றடைகிறதா என்பது குறித்து முதல்வர் உத்தரவின் பேரில் ஆய்வு செய்கிறோம் என்று தெரிவித்தார். 

3வது அலை வந்தாலும் எதிர்கொள்ளும் திறன் தமிழக அரசுக்கு உள்ளது என்ற அமைச்சர், ஆவின் பாலகத்தில் வேறு பொருட்களை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். கொரோனோ காலம் என்பதால் விவசாயிகளுக்கு பால் நிலுவைத்தொகை உள்ளது, பால் நிலுவைத் தொகை தொடர்பாக கவனத்திற்கு வந்தால் சரிசெய்யப்படும் என்ற அவர், ஆவின் ஒன்றியங்களில் 636 பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றால் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய மணி நியமனத்திற்கு அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.