கொட்டும் மழையில் நடைபெற்ற திருக்கழுக்குன்றம் தேரோட்டம்!

திருக்கழுக்குன்றத்தில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெய்து வரும் கனமழையில் நனைந்தபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழா கடந்த…

திருக்கழுக்குன்றத்தில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெய்து வரும் கனமழையில் நனைந்தபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு வேதகிரீஸ்வரர்
கோயிலில், சித்திரை திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி நடைபெற்று
வருகிறது. விழாவின் ஏழாம் நாளான இன்று திரு தேரோட்ட உற்சவம் நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து திருக்கழுக்குன்றம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையிலும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மேலும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மழையினால் கோயிலில் தஞ்சம் அடைந்தனர். வெப்பம் தனிந்து குளிர்ந்தக்காற்று வீசி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.