“அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது!”

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்ததாக, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாட்டில் தற்போது 31 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்…

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்ததாக, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாட்டில் தற்போது 31 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அளவிற்கு, மின்திறன் உள்ளதாகவும், அதனை அரசு முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தற்போது மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல், ஏற்கனவே இருந்த அதிமுக அரசு மீது, தவறான குற்றச்சாட்டை தெரிவித்து வருவது சரியல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.