கர்ணன் பட பாணியில் கடைகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!!

மானாமதுரை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்ற கூறிய கிராமத் தலைவரை அடித்ததால். 300 மேற்பட்ட கிராம பொதுமக்கள் சேர்ந்து கடைகளை சூறையாடினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்…

மானாமதுரை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்ற கூறிய கிராமத் தலைவரை அடித்ததால். 300 மேற்பட்ட கிராம பொதுமக்கள் சேர்ந்து கடைகளை சூறையாடினர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறிய கிராம தலைவரை, அடித்ததால் கோபம் அடைந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை சூறையாடினர்கள்.

மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமத்தில் மதுரை டூ ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் கிராமத்திற்கு சொந்தமான இடங்களில் மீனாட்சி சுந்தரம் என்பவர் டீக்கடையும் மற்றும் ராமலிங்கம் மளிகை கடையும் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வந்துள்ளார்கள்.

கிராம மக்கள் சார்பாக கிராமத் தலைவர் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் கடைகளை அகற்றவில்லை. மேலும் இது தொடர்பாக கிராம பொதுமக்கள், ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் தாசில்தார் மனு கொடுத்துள்ளனர்.எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை.

பின்பும் இதனை அகற்ற கூறிய கிராம தலைவர் வேல்முருகனை, அகற்ற மாட்டோம் என்று கூறி கிராமத் தலைவர் வேல்முருகனை ராமலிங்கம், ஜோதி மற்றும் மினாட்சிசுந்தரம் ஆகியோர் சேர்ந்து தாக்கியதால் கோபமடைந்த 300 மேற்பட்ட ஊர்மக்கள் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கி ஆக்கிரமிப்பை அகற்றினார்.

தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினர் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி யாரும் ஆக்கிரமிப்புகளில் கடை போட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.