“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யவில்லை என்றால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்.
சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெரும் சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என அரசிற்கு மாநில உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி படம் வெளிப்பட்டதால், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தவிர்க்க படம் வெளியிடப்பட்டுள்ள ஒவ்வொரு திரையரங்கு முன்பும், பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், “தி கேரளா ஸ்டோரி” படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என்றும் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். மேலும் பாஜகவின் முதன்மை அணியே திமுக தான் என்றும் திராவிட மாடல் என்று குறித்து ஆளுநர் கூறிய கருத்தை தான் ஏற்பதாகவும் அவர் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா