“அரசியல் சாசனத்தை சிதைப்பதற்கு பாஜக முயற்சித்தால் அந்த திட்டம் முறியடிக்கப்படும்” – ராகுல்காந்தி பேச்சு!

பாஜக மூன்றில் ஒரு பங்கு மகளிர் காண மசோதாவை நிறைவேற்ற விரும்பினால் நாங்கள் அந்த மசோதாவை ஆதரிக்கிறோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பிரச்சார கூட்டத்தில் 10,000 மேற்பட்ட பெண்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசியவர்,

“விருதுநகர் வெடிவிபத்து சம்பவத்திற்கு இரங்கல். இந்திய அரசியலமைப்பு சாசனம் இந்தியாவை மாநிலங்களின் கூட்டமைப்பாக வரையறை செய்துள்ளது. மாநிலங்கள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் ஒரே மாதிரியான மரியாதையோடு அனைத்து மாநிலங்களும் பெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களும் சமமாக ஒரே மேசையில் அமர்ந்து பேசக்கூடிய தகுதியை பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் கலாச்சாரம், மொழி உள்ளிட்டவைகளை தங்களுக்கான எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு வழங்க உள்ளது.

இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் நாட்டில் உள்ள பண்பாடு, கலாச்சாரம் முன்னேற்றத்தை புரிந்து கொண்டு உருவாக்கி உள்ளார்கள். தமிழ் நாகரீகம் ஒரு புதிய நாகரீகம் அல்ல உலகின் மிக தொன்மையான நாகரிகமான ஒன்று. தமிழுக்கு என்று மிக தொன்மையான வரலாறு உண்டு. பாஜக இப்போது இந்தியாவில் புதிய கட்டமைப்பை கொண்டு வர முயற்சிக்கிறது. பாஜக ஒரே நாடு, ஒரு தேர்தல், ஒரு மொழி, ஒரு வரலாறு, ஒரு சித்தாந்தம் என்று வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இந்தியாவில் முழு வரலாறு தான் இருக்கும் என்றால் தமிழ் மொழியின் வரலாறு எங்கு உள்ளது. கன்னடம். மராட்டியம். மணிப்பூர் போன்றவைகளின் வரலாறு எங்கு உள்ளது. பாஜக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் வரலாறும் தங்களின் சித்தாந்தத்திற்கு அடிபணிந்து செயல்பட வேண்டும் என நினைக்கிறார்கள்.

அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு வாய்ந்த மொழிகளும் தங்களின் நோக்கத்திற்கு கீழே அடிமைப்பட வேண்டும் என நினைக்கிறது. இந்தியாவின் இரண்டு சித்தாந்தங்களுக்கும் மதிப்பீடுகளுக்கும் இடையேயான போராட்டமாக உருவெடுத்துள்ளது. ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தின் கீழ் அனைத்து மாநிலங்களும் அடிபணிந்து நிற்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த தேர்தலில் தமிழகத்திற்குள் பாஜக எப்படியாவது ஊடுருவ வேண்டும் என நினைக்கிறது. அதிமுக மிகப்பெரிய பழமையான வரலாற்றை கொண்டு இருந்தது. காங்கிரஸ் பேரியக்கத்தை போல திமுகவை போல அனைத்தையும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்திற்கு மிகப்பெரிய பங்காற்றி உள்ளது.

அதிமுகவின் மகத்தான தலைவர்கள் தமிழகத்தின் வரலாற்றை பாதுகாத்தார்கள். இப்போதைய அதிமுக பழைய அதிமுக கிடையாது. அதிமுக என்பது இன்று வெற்று கூடாகிவிட்டது. அதிமுக தலைவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் அடிபணிந்து சரண் அடைந்து விட்டார்கள். அதிமுக தலைவர்களின் ஊழல் என்பது ஒரு பொறியில் சிக்கவைத்து பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் அடிபணிந்து சேவகம் செய்ய வைத்து விட்டது.

பாஜகவினரால் நேரடியாக தமிழகத்தின் மொழியையும், இனத்தையும், வரலாற்றையும், பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் தாக்க முடியாது. அதனால் அதிமுகவின் முகமூடியை இங்கு பயன்படுத்துகிறார்கள். இந்த தேர்தல் என்பது பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டங்களாக உள்ளது. ஒரு பக்கம் காங்கிரஸ் பேரியக்கமும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி தமிழகத்தின் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் உள்ளது. நாங்கள் தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரம் ஆகியவையை போற்றி பாதுகாக்க முயற்சி எடுத்து வருகிறோம். அதிமுகவும் அவர்களது முகமூடி அணிந்துள்ள பாஜகவும் தமிழகத்தின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு பாசனத்தின் மீது தாக்குதலை நடத்த முயற்சித்தார்கள். நாங்கள் மகளிர்காண இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற போவதாக சொல்லிவிட்டு தொகுதிகளை மறுவரை செய்து தேர்தல் வரைபடத்தை இந்தியாவில் சதி திட்டத்தை செய்தார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளை மாற்றி அமைக்க முயற்சி மேற்கொண்டார்கள்.
அரசியல் சாசனத்தை தாக்குவதற்கான எந்த முயற்சியையும் சிதைப்பதற்கும் முயற்சி நடந்தால் மீண்டும் மீண்டும் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளால் அந்த திட்டம் முறியடிக்கப்படும். மோடிக்கு தோல்வி பரிசளிக்கப்படும்.

பாஜக மூன்றில் ஒரு பங்கு மகளிர் காண மசோதாவை நிறைவேற்ற விரும்பினால் நாங்கள் அந்த மசோதாவை ஆதரிக்கிறோம். எதிர்க்கட்சிகள் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்ற உத்திரவாதம் அளிக்கிறேன்.
தமிழகத்திற்கான சிறப்பான சமூக நீதி செயல்பாடு உள்ளது. தமிழகம் மகத்தான வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்றிக் காட்டியுள்ளது. தமிழகத்தின் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி திட்டம் என்பது மக்களின் அரசு அனைத்து சமூகத்தை சேர்ந்தவருக்கும் மிக பெரிய ஆதரவாக இருந்து வளர்ச்சி பாதையில் செலுத்தியுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் இந்த பாதையிலேயே தொடர்ந்து தங்களது அரசியலை செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.