புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா – காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!

நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.  நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று…

நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அதன் திறப்பு விழா வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததற்கு  கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் திறக்கக் கூடாது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால், ஆகஸ்ட் 1975-ல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் 1987-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நாடாளுமன்ற நூலகத்தைத் திறந்து வைத்தார். காங்கிரஸ் அரசின் போது, காங்கிரஸ் தலைவர்களால் நாடாளுமன்றக் கட்டடங்களைத் திறக்க முடியுமானால், பிரதமர் மோடி அதை ஏன் செய்யக் கூடாது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.