பேருந்தே வராத கிராமத்தில் இருந்து முதல் ஐஏஎஸ் – யுபிஎஸ்சி தேர்வில் கிருஷ்ணகிரி மாணவி சாதனை!

பேருந்து வசதியே இல்லாத கிருஷ்ணகிரி மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவி யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கருங்காலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவியின் மகள் ஹரிணி. சிறு வயது முதலே ஐ.ஏ.எஸ்…

பேருந்து வசதியே இல்லாத கிருஷ்ணகிரி மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவி யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கருங்காலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவியின் மகள் ஹரிணி. சிறு வயது முதலே ஐ.ஏ.எஸ் கனவைக் கொண்டிருந்த ஹரிணி, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி 12-ம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தார். இதையடுத்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கலகத்தில் இளநிலை பட்டம் பெற்றார். தொடர்ந்து சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் சேர்ந்த அவர், கடந்தாண்டு குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று பாளையங்கோட்டையில் வேளாண்மை அலுவலராக பணியில் சேர்ந்தார்.

இருப்பினும் ஐஏஎஸ் கனவில் இருந்து பின்வாங்காத அவர், பணியில் இருந்து விலகி கடுமையான உழைப்பிற்கு பிறகு, யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 289-வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹரிணி, பேருந்தே இல்லாத கிராமத்திலிருந்து இந்த இடத்திற்கு வந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், வறுமை ஒழிப்பு, கிராமபுற வளர்ச்சி என்பதை தனது இலக்காக கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குழந்தை திருமணம் சகஜமாக நடைபெறும் பகுதியில் இருந்து ஐஏஸ் கனவு வரை கொண்டு வந்த ஹரினியின் குடும்பத்தினர் அவரது வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.