இந்தியா – ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் அலீஸா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளையும் வென்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 3 போட்டிகளில் 89 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 பேட்டர் தரவரிசையை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி, ஒருநாள் போட்டிகளில் பேட்டர்களுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டைப் பின்னுக்குத் தள்ளி இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.







