டி 20 உலககோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்விடைந்தது. ஆனாலும் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக இந்திய அணி மார்ச் 5 ஆம் தேதியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
முன்னதாக தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கின் தந்தைக்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ரிங்கு சிங் தனது தந்தையைப் பார்ப்பதற்காக சென்னையில் இருந்து நொய்டா சென்றார். ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து ரிங்கு சிங் சென்னைக்கு திரும்பி அணியில் சேர்ந்தார். ஆனால் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அப்போட்டியில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கிடையில் ரிங்கு சிங்கின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் மீண்டும் ஊருக்கு திரும்பிய ரிங்கு சிங் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அடுத்ததாக கொல்கத்தாவில் நடைபெற்ற அரையிறுதிக்கான முக்கிய போட்டியில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் மோதின. தந்தையின் இறுதிச் சடங்கை முடித்த ரிங்கு சிங் மீண்டும் அணியில் சேர்ந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்ற இந்தியா அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தனது இண்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் போட்டிக்கு முந்தைய அணி கூட்டத்தின் வீடியோவான அதில் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பிர் ரிங்கு சிங்குவை பற்றி பேசுகிறார்.
வீடியோவில் கௌதம் கம்பிர் பேசியுள்ளதாவது :
நண்பர்களே, நான் தொடங்குவதற்கு முன். ரிங்கு, அணியில் மீண்டும் இணைய நிறைய குணம் தேவை. ரிங்கு சிங், ஒன்றை நினைவில் கொள், நீ தனியாக இல்லை. இந்த நேரத்தில் முழு அணியும் உன்னுடன் நிற்கிறது, எனவே வலுவாக இரு. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோவை பார்த்த பலரும் ரிங்குவின் ஸ்போர்ட்ஸ்மான்ஷிப்பையும் கடினமான நேரத்தில் ரிங்குவுடன் இந்திய அணி துணை நிற்பதனையும் காட்டுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.







