சர்ச்சை கருத்து கூறியதாக, எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கமும் செய்யப்பட்ட முதல் நபர் நான்தான் – ராகுல் காந்தி

எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 10 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.…

எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 10 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாடிய அவர், மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து அரசியல் செய்வதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டதால்தான் பாரத் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டதாக கூறினார். அதையும் தடுத்து நிறுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, தமது யாத்திரைக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவு அளித்ததாக கூறினார். மேலும், வேலையில்லா திண்டாட்டம், விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாத மோடி அரசு, மக்களை திசைதிருப்ப செங்கோல் விவகாரத்தை கையில் எடுத்ததாக ராகுலகாந்தி சாடினார்.

இந்த நிக்கலையில், இன்று அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, சர்ச்சை கருத்து தெரிவித்ததாக, அதிகபட்ச தண்டனையும், எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கமும் செய்யப்பட்ட முதல் நபர், தாம் தான் என குறிப்பிட்டார். இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று, தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை எனக் கூறிய அவர், இதுவே தனக்கு வழங்கப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பாக எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்த பேசிய அவர் 2004 ஆண்டு அரசியலில் இணைந்தபோது தகுதி நீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் எல்லாம் இந்தியாவில் சாத்தியமில்லை என்று கருதியதாகவும், ஆனால் தற்போது அதனை நிகழ்கால யதார்த்தமாக கண்முன்னே பார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.