கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கைது – கணக்கில் வராத ரூ2.5லட்சம் பறிமுதல்!

கடலூரில் வாகனத்திற்கு தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையின்போது அலவலகத்தில் கணக்கில் வராத 2.5லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.…

கடலூரில் வாகனத்திற்கு தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையின்போது அலவலகத்தில் கணக்கில் வராத 2.5லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த செல்வராஜ் சென்னையில் கழிவு நீர் அகற்றும் வாகனத்திற்கு தகுதி சான்றிதழ் மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்காக  கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது தகுதி சான்றிதழ் வழங்க ரூ.5,500 லஞ்சமாக அளிக்க வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் கேட்டதாகக் கூறப்படுகிரது. இது தொடர்பாக செல்வராஜ் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்து அனுப்பினர். அதனை அவர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகரிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர்.

மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகரும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ2.5லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.