அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்ததாகவும். அவரால் பேச முடியவில்லை என அமைச்சர் கேஎன்.நேரு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்திய அமலாக்கத்துறை பின்னர் அவரை கைது செய்தது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் திடீர் நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு 12:30 மணியளவில் ஓமந்தூரார் அரசு பண்ணோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை இன்று காலை அமைச்சர் நேரு சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் கேஎன்.நேரு சந்தித்தார். அவர் கூறியதாவது, “அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை.சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உடல் நலம் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் . அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்தேன். ஒரு மணி நேரம் காத்திருந்து பின்பு அனுமதி வாங்கி பார்த்தேன். துணை ராணுவ படையினர் கட்டுப்பாடுகுள் மருத்துவமனை உள்ளது” என அமைச்சர் நேரு தெரிவித்தார்.







