கத்தரிகாய் என்றால் பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது பிரியாணியாகத்தான் இருக்க முடியும். அதென்ன பிரியாணி? பிரியாணி விரும்பி சாப்பிடுவோர் நிச்சயமாக கத்தரிக்காய் பச்சடியும் சேர்த்து ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
கத்தரிக்காயில் பல வகை இருக்கிறது. எண்ணை கத்தரிகாய், சுண்ட கத்தரிக்காய், முள்ளுக் கத்தரிக்காய் என இன்னும் பல உள்ளன. முள்ளுக் கத்தரிக்காய் என்றால் முள்ளு முள்ளாக இருக்கும், கையில் குத்தும், உண்ண முடியாதது என்று பதற வேண்டாம். வேலூர் மாவட்டம் இலவம்பாடி பகுதியில் அதிகம் விற்பனையாகும் கத்தரிக்கா வெரைட்டி தான் இந்த முள்ளுக் கத்தரிக்காய்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வரலாற்று ஆய்வுகளின் படி பார்த்தால், முள்ளுக் கத்தரிக்காய் வேலூர், சென்னை மாகாணத்தின் வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தது. 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பு கையேடு கூறுவது என்னவென்றால், அன்றைய மக்கள் தொகையில் 61% மக்கள் விவசாயத்தையே தொழிலாக செய்து வந்தனர். 1960-1961 ஆம் ஆண்டில் வட ஆற்காடு மாவட்டத்தில் விவசாய நிலங்களின் பரப்பளவு 7,623 ஏக்கராக இருந்தது.
தமிழ் மொழியில் “எலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்” என்று அழைக்கப்படும், வேலூர் SPINY BRINJAL, வேலூர் மாவட்ட கிராமங்களில் வளர்க்கப்படும் ஒப்பீட்டளவில் அரிதான நாட்டு இனம். பொதுவாக பலாப் பழத்தைத்தான் சொல்வார்கள். வெளியில் முள்ளாக இருந்தாலும் உள்ளே பலா சுழை சுவையாக இருக்கும் என்று. அதேபோல் இந்த முள்ளுக் கத்தரிக்காயும் வெளியில் முள்தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், முள்ளுக் கத்திரிகாய் வதக்கலின் சுவையால் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
வேலூர் மக்கள் மட்டுமின்றி சென்னை வாசிகள் மட்டுமின்றி இந்திய அளவில் இந்த முள்ளுக் கத்தரிகாய் பேசுபொருளாகி உள்ளது. GI TAG எனப்படும் , Geographical Indication அங்கீகார்த்தை பெற்றிருக்கிறது நம் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய வேலூர் முள்ளுக் கத்தரிக்காய். Geographical Indication என்றால் என்ன என்று வினவ வேண்டாம். சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், மதுரை மல்லியை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். மதுரையில் அந்த தட்பவெட்ப நிலைக்கு அந்த மண்ணுக்கு விளையும் பொருள் என்பதால்தான் அதனை மதுரைமல்லி என்பார்கள். அப்படி ஒரு இடத்திற்கே உரித்தான பயிர்/பொருளைத்தான் Geographical Indication என்பார்கள்.
இந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதன் மூலம் பல நன்மைகளும் இருக்கிறது. GI TAG கிடைக்கப்பெற்றதன் மூலம் பல்வேறு சர்வதேச சந்தைகளில் கூட விற்பனை செய்ய முள்ளுக் கத்தரிக்காய் தகுதி பெறுகிறது. முள்ளுக் கத்தரிக்காய் மற்ற கத்தரிகாய் வகைகளை விட விலை அதிகம். அதற்கு காரணம் இதனை அறுவடை செய்வதில் இருக்கும் உழைப்பின் அளவானது அதிகம். மேலும் தனித்துவமான சுவையும் இதன் மதிப்பை கூட்டுகிறது.
ஆனால், மற்ற கத்திரிக்காய் ரகங்கள் மலிவான விலைக்கு கிடைப்பதால் , முள்ளுக் கத்தரிகாய் விளைவிக்கும் விவசாயிகள் தங்கள் சரக்கை குறைந்த விலையில் விற்க தள்ளப்படுகிறார்கள். அதனால் அவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஜி.ஐ. டேக் பெறப்பட்டதன் மூலம் பல்வேறு சந்தைகளில் சந்தைப்படுத்தப்படுவதால் வசதியான மக்களும் வாங்கிக்கொள்ள முடிகிறது.
தற்போதுதான் இதற்கு GI TAG அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆனால் அதெற்கெல்லாம் முன்பே இந்த கத்தரிக்காய் வகை மிகவும் பிரபலமானது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, வேலூர் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது கூட “ஏப்பா அந்த முள்ளுக்கத்தரிகா 2 கிலோ கொண்டு வர சொல்லு” என்று ருசியான முள்ளுக்கத்திரி வதக்கல் சாப்பிட்டுவிட்டுதான் போவார் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
ருசிக்கு மட்டும் அல்ல நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகவே இருக்கிறது இந்த முள்ளுக் கத்தரிக்காய்…
- அஜய் வேலு, செய்திப்பிரிவு.