பான் – ஆதார் இணைப்பதில் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று வருமான வரித்துறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஒருவரின் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வரி ஏய்ப்பை தடுக்க உதவும் என வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஏற்கனவே பான் எண்ணை ஆதாருடன் இணைக்க பலமுறை அவகாசம் கொடுத்தும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காதோர் எண்ணிக்கை கணிசமாக இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் கடந்த மார்ச் மாதம் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை வருமான வரித்துறை நீட்டித்தது. அதோடு கடந்த மார்ச் 31-க்கு பிறகு விண்ணப்பிப்போருக்கு ரூ.1000 அபராதமும் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.
அதன்படி, ஆதாருடன் பான் கார்டை இணைக்க இன்றே கடைசி நாளாகும். இதற்குமேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், பான் கார்டை – ஆதாருடன் இணைக்காதவர்கள் இன்று இணைத்து வந்தனர். இதில் சில பிரச்னைகள் ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வருமான வரித்துறை நிர்வாகம் அதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
Kind Attention PAN holders!
Instances have come to notice where PAN holders have faced difficulty in downloading the challan after payment of fee for Aadhaar-PAN linking.
In this regard, it is to be informed that status of challan payment may be checked in ‘e-pay tax’ tab of…
— Income Tax India (@IncomeTaxIndia) June 30, 2023
இது பற்றி வருமான வரித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆதார் – பான் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதை பதிவிறக்குவதில் சிரமம் இருப்பது தெரியவந்துள்ளது. வருமான வரி இணையதளத்தில் ’E-Pay Tax’ என்னும் பக்கத்தில் கட்டணத்தைச் செலுத்தியதற்கான விவரங்களை கண்டறியலாம். வழக்கமாக பணம் செலுத்தப்பட்டவுடன், மின்னஞ்சல் மூலம் ரசீது அனுப்பப்படும். 30.06.2023 வரை கட்டணம் செலுத்தியும் பான் – ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளது.