செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “நான் பேசாத ஒரு விஷயத்தை கட், காப்பி, பேஸ்ட் பண்றாங்க, நான் யாரையும் தவறாக பேசல, முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகத்தான் பேசினேன். இந்த தற்குறி கூட்டத்தின் பாலிசியே திசைதிருப்புறதும், பொய் செய்திகளை பரப்புறதும்தான்.
என்னை கைது செய்ற நோக்கமே கிடையாதுனு சொல்லிவிட்டு மக்கள் வரி பணத்தில் 3000 காவலர்கள் பாதுகாப்போடு ஒரு பயங்கரவாதியை கூட்டிகொண்டு போகிற மாதிரி சென்னையில் இருந்து சாலை வழியாக 400 கி.மீ வரை அழைத்து வந்தார்கள்; எங்களை முறையா கவனிக்கவில்லை. செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் பல கேள்விகளை கேட்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகரத்தை சட்டப்படி சந்திப்போம்.
பெண்களை தாழ்த்தி பேசவேண்டும் என்ற எண்ணம் துளி கூட என் மனதில் இல்லை; என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை, எனக்கு மனைவி இருக்காங்க, அவங்களோடதான் நான் வாழ்கிறேன், எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு,, தங்கை இருக்கு, தமிழ்நாட்டில் இருக்குற ஒவ்வொரு பெண்களையும் என் தாயாகவும், தங்கையாகவும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்; பொய் வழக்குக்கெல்லாம் நான் பயப்படக்கூடிய ஆள் கிடையாது.
சில தலைவர்கள் நான் பேசியதை முழுதாக பார்க்காம, நான் தவறாக பேசிவிட்டேன் என கண்டனம் தெரிவித்தது எனக்கு வருத்தமாக இருக்குறது. நான் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினதால்தான் இந்த தரம் கெட்ட அரசு என்னை கைது பண்ணி செய்திருக்கிறது. நான் மறுபடியும் சொல்றேன், இந்த கைதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்; மீண்டும் நூறு முறை பேசுவேன்.
கரூரில் 41 பேரை பலி கொடுத்துவிட்டு, ஒரு தலைவர் துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு பத்திரிகையாளர்களை சந்திக்கப் பயந்து புறமுதுகு காட்டி ஓடிப்போன நம்பர் ஒன் ஓடுகாலி முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு வந்திருக்காரு. வழக்கு போட்டா நாங்க பயந்து ஓடிடுவோம்னு நினைச்சிருக்காங்க. ஆனா, நாங்க மக்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்கப் பயந்தது கிடையாது.” இவ்வாறு அவர் பேசினார்.




