தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிகப்படியான இடங்கலில் வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள் தடுப்பு படை ஆகிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 19-ம் தேதி ஆளுநர் உரையுடன் கடந்த தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய் ரூ.75,000 வரை பயிர்க் கடன் தள்ளுபடி, தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் (செப்.15 முதல் அமல்) உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார். தேர்தல் வாக்குறுதியில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என கூறிய முதலமைச்சர் விஜய் ரூ.75,000 வரை மட்டுமே தள்ளுபடி செய்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.
இதனிடையே, தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல தமிழ்நாடு நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில் க தமிழக அரசுக்கு ரூ.13.18 லட்சம் கோடி
கடன் சுமை உள்ளது என்றும், ரூ.78,324 கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது என்றும், அரசின் வருவாய் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 காசுகள் வட்டிக்கே செலவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேர்தல் வாக்குறுதிகள் நிதிநிலை சீரமைத்த பிறகு படிபடியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான் (2026-27) பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று காலை 9:30 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. இதில் நிதியமைச்சர் மரிய வில்சம் காலை 10 மணி அளவில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதனயடுத்து நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார். இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது இன்று மதியம் நடைபெறும் அலுவல் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இன்றைய பட்ஜெட்டில், மகளிர் உரிமைத்தொகை ரு..2500-ஆக உயர்வு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கும் திட்டம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை, தாய்மாமன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டபல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.




