வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்!

சட்டப்பேரவையில் 2026-27 வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

2026-27-ஆம் ஆண்டுக்காண படஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், பயிர்க்கயன் தள்ளுபடி, மேகதாது, காவிரி விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவை சரியாக 9:30 மணிக்கு தொடங்கியது. சபாநாய்கர் ஜே.சிடி.பிரபாகர் வருகைக்கு பின்னர் வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தவெக அரசின் முதல் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.