வேளாண் பட்ஜெட்: மண்வளப் பாதுகாப்புக்கு ரூ.122.51 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.122.51 கோடி ஒதுக்கீடு செய்து வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்தார்.

தமிழ்நாடு சாட்டப்பேரவையில் இன்று 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையிலும் விவசாயிகளின் நலனை அக்கறை கொண்டுள்ளது நம் அரசு. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ. 134.84 கோடி குறுவை தொகுப்பு திட்டம் வழங்கினார். பெங்களூரு மாம்பழம் போதிய விலை நிர்ணயம் செய்ய – துறை தயாராக உள்ளது. நீர் பாசனை திட்டத்தை மேம்படுத்த இந்த அரசு முன்வரும். அனைத்து விவசாயி குடும்பத்தினருக்கு மகனாக உள்ளார் முதல்வர். பேரிடர் காலங்களில் விவசாயிகளின் நலன்கள் காக்கப்படும். போதுமான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் வெளிப்படையாக இருக்கும்.

மண்வளம் மேம்படுத்த அடுத்த ஐந்து வருடங்களுக்கு 600 கோடி ரூபாய் வழங்கப்படும். மண் பயன்பாட்டை அறிந்து, உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, 1 லட்சம் விவசாயிகளுக்கு 4 கோடி மதிப்பீட்டில் மண் அட்டைகள் வழங்கப்படும். 20,000 ஏக்கர் உயிர்மை வேளாண்மைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நான்காயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க, 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மண்ணின் வளத்தை பாதுகாக்க “தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்” திட்டத்திற்கு ரூ.122.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்புத் திட்டதிற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கப்படும், எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்கு 203.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’’ இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.