அரசியல் விமர்சனங்களுக்கு அஞ்சவில்லை என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பாஜகவினரும் பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதைக் குறித்து பேசிய குஷ்பு, ”எனக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கான மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பேன். நிறைய பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளியே சொல்ல பயப்படுகின்றனர். பயப்படாதீர்கள், வெளியே வாருங்கள், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் – அண்ணாமலை வாழ்த்து!
இதனைத் தொடர்ந்து, நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நிஷாந்த், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஷ்பு சுந்தருடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய குஷ்பு, “மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியை, தமிழ்நாடு அரசு முறையாக செலவு செய்யவில்லை. பெண்களுக்காக இன்னும் அதிகமாக குரல் கொடுப்பேன்.
பிரதமர் மோடிக்கும், இந்திய அரசங்கத்திற்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் விமர்சனங்களுக்கு நிச்சயம் குஷ்பு எப்போதும் பயந்தவர் அல்ல. நாளை டெல்லி சென்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்த முழு வீடியோவைக் காண :







