முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் – அண்ணாமலை வாழ்த்து!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள குஷ்புவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவினர் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து, நடிகை குஷ்பு நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், எனக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக நான் இருப்பேன். பெண்கள் பிரச்னைகளை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். பயப்படாதீங்க, வெளியே வாங்க, உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குஷ்புவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பாஜக சார்பில் குஷ்புவுக்கு வாழ்த்துகள். பெண்களின் உரிமைகளுக்கான அவரது விடாமுயற்சி மற்றும் போராட்டத்திற்கான அங்கீகாரம் இது என்று பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கிராம பெண்களுடன் மகளிர் தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்!

Web Editor

தமிழில் அர்ச்சனை திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி 

EZHILARASAN D

200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை-யுனிசெஃப் அமைப்பு வாழ்த்து

Web Editor