“பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“இந்திய அரசின் முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான ப.சிதம்பரம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2025 – 2026 குறித்துப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3 சதவிகிதமாகக் குறைத்துள்ளதனையும், வருவாய் பற்றாக்குறையை 41ஆயிரத்து 635 கோடியாகக் குறைத்ததையும் சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளார்.

ஒரு அரசின் முதலீட்டு அளவை பொறுத்தே வளர்ச்சி இருக்கும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு தனது முதலீட்டு அளவை 22.4% அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறப்பாக வாழ்த்தியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.