பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சும் மனைவியின் உணர்வுகளை வரிகளாய் தொடுத்த கவிஞர் வைரமுத்துவின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான கவிப்பேரரசு வைரமுத்து, தமிழ் இலக்கிய உலகிலும் நீங்காத இடம்பிடித்துள்ள கவிஞர்களுள் முக்கியமான ஒருவராக இன்று வரை இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர், அன்றைய ரஜினி, கமல் மட்டும் அல்லது விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தற்போதைய முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கும் பாடல்கள் எழுதி, தன் எழுத்தின் வாயிலாக இன்றும் இளமையோடே வளம் வந்துக் கொண்டிருக்கிறார். இது தவிர கவிதை, சிறுகதை, நாவல் என எண்ணற்ற நூல்களையும் இயற்றியுள்ள கவிப்பேரரசு, இத்தகைய கலை பணிக்காக பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.
இப்படி எழுத்துத் துறையில் மட்டும் அல்லாமல் கவிஞர் வைரமுத்து அவர்கள் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர், தன் மனதில் பட்ட கருத்துகளையும், கவிதைகளையும், தன் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளையும் எப்போதுமே பதிவிட்டு பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் கடந்த வாரம் கூட ‘வணங்கான்’ படத்தில் அவர் எழுதியுள்ள ஐந்து பாடல்கள் குறித்தும், இயக்குனர் பாலாவின் கதை திறன் குறித்தும் கவிதை வரிகளாய் தொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அந்த வரிசையில் இன்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஓர் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில்,
பிரிவுக்குப் பிறகு
உறவுக்கு வந்த கணவனைக்
கொஞ்சுகிறாள் மனைவி
“வெட்கம் விடைகேட்குதே”
என்கிறாள்
“கொச்சையான சொற்கள்
கொஞ்சம் செவிகேட்குதே”
என்கிறாள்
பாடல் பதிவைப் பாருங்கள்
இயக்கம் ராஜசேகர்
இசை ஜோகன்
படம் 13ஆவது அட்சக்கோடு
என்ற வரிகளை எழுதி, பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Vairamuthu/status/1650689967751045121?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









