மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருவர் படுகாயம்..! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சென்னை தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற தோழியும் மாஞ்சா நூலால் காயம் அடைந்து இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கே.கே நகர் பகுதியை…

சென்னை தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற தோழியும் மாஞ்சா நூலால் காயம் அடைந்து இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் நிக்கி சரன். 33 வயதான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் சாலிகிராமம் பகுதியை சார்ந்தவர் நிக்கி சரன் உடைய பெண் தோழி வந்தனா. இருவரும் ஒரே நிறுவனத்தில் பணி புறிந்து வருகின்றனர்.

இன்று காலை இருவரும் பணியை முடித்துவிட்டு சென்னை, தேனாம்பேட்டை விஜயராகவா தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருக்கும் பொழுது, நிக்கி சரண் கழுத்தில் மாஞ்சா நூல் மாட்டி கழுத்தறுந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவருடன் பயணித்த பெண் தோழி வந்தனா, அதனை கண்டு தனது நண்பர் நிக்கியை காப்பாற்ற மாஞ்சா நூலை இழுத்த பொழுது, கை வெட்டுப்பட்ட நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர். பிறகு இருவரும் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டு இருக்கின்றனர்.

அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்டு, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மீட்டெடுத்து அதே தெருவில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிக்கி சரன்க்கு கழுத்திலும், வந்தானவிற்கு கையிலும் பலமான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தற்போது நிக்கி சரண் மற்றும் வந்தனா ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.