முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

திருமணநாளில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்

குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, திருமணநாளில் கத்தியால் குத்தி கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் அக்பர் காலனியில் வசித்து வருபவர்கள் அருள் – ரேவதி தம்பதியினர். இவர்கள் காதல் திருமணம் செய்து 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரபல ஜவுளி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்த அருள், தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதால் ரேவதி கடந்த 1 வருடமாக கணவனை பிரிந்து அவரது தாய் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், அருள்-ரேவதியின் திருமண நாளான நேற்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற ரேவதியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்த அருள் அழைத்துள்ளார். அப்போது அவர் அழைப்பை ஏற்கமறுத்த ரேவதி தன்னுடைய உடைமைகளை தரும்படி கேட்டுள்ளார். உடைமைகளை தருவதாககூறி அழைத்து சென்றபோது அருள் வீட்டிற்கு அருகே உள்ள காமராஜர் சாலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அருள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்திவிட்டு தப்பிஓடியுள்ளார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி ஆபத்தான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த மயிலாடுதுறை போலீசார் அருள் கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சச்சின் பைலட் முதலமைச்சராக எதிர்ப்பு, கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

EZHILARASAN D

அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட “மீம்”!

Halley Karthik

நியூஸ் 7 தமிழ் முன்னெடுப்பு; சென்னையில் 2வது நாளாக நடைபெறும் கல்வி கண்காட்சி – உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்

Web Editor