முக்கியச் செய்திகள் குற்றம்

கத்திக்குத்தில் முடிந்த வாட்ஸ்ஆப் வாக்குவாதம்

வாட்ஸ்ஆப்பில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம், கத்திக்குத்தில் முடிந்துள்ளது.

பெரம்பலூரில் 12-ஆம் வகுப்புப் படித்து வரும் புவியரசு, கடந்த 27-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு இடங்களில் பேனர்களும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இதனை புவியரசும், அவரது நண்பர்களும் வாட்ஸப் குழுவில் பகிர்ந்துள்ளனர். அப்போது கவுதம் என்ற கல்லூரி மாணவன், போஸ்டர் ஒட்டும் அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளா என புவியரசுவை விமர்சித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து. புவியரசு தனது தந்தையுடன் சென்று கவுதமின் தாயாரை மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவுதமன் தனது நண்பர் அபிஷேக்குடன் புவியரசு வீட்டிற்கு சென்றபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. புவியரசின் குடும்பத்தினர் அபிஷேக்கை கத்தியால் வெட்டியதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. மோதலில் புவியரசுக்கும், அவரது உறவினரும் காயம் அடைந்தனர்.

அண்மைச் செய்தி: ‘நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது’- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இருதரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது புவியரசு குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியதில் கவுதம் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram