மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம் காரணமாக ஐந்தாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு, வானகிரி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம் காரணமாக ஐந்தாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு, வானகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள், பைபர் படகுகள் ஆகியவை பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அண்மைச் செய்தி: உக்ரைன் – ரஷ்யா, இன்று மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை

கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தால் மழைக்கால நிவாரணம் போன்று தற்போதும் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, கனமழை எதிரொலியாக இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.