முக்கியச் செய்திகள் சினிமா

காதல் நாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு இன்று பிறந்தநாள்!

‘பியார் பிரேமா காதல்’ என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அப்படத்தில் இடம்பெற்ற மனதை கவரும் பாடல்களும் மனதை கொள்ளையடித்த ஹரிஷ் கல்யானும்தான்.

இந்த படத்திற்கு முன்பு ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளியில் படத்தில் தன்னுடைய முதல் திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் ‘பொறியாளன்’, ‘சந்தா மாமா’, ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, மற்றும் ‘தாராள பிரவு’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, மற்றும் ‘தாராள பிரவு’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்களின் கவனம் பெற்றார்.

ஆரம்பக்காலங்களில் மக்களிடையே பெரிதும் பிரபலமடையாத ஹரிஷ் கல்யாணை விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் கவனத்தயும் ஈர்த்தார். இளம் பெண்கள் மத்தியில் ஹாண்ட்சம் நாயகனாக வளம் வர தொடங்கினார். இதற்கு பின் அவர் தேர்தெடுக்கும் படங்களில் இவரை ரசிக்காதவர்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகனும் கூட, தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். திரைபிரபலங்கள் மற்றும் இவரின் ரசிகை பட்டாளமே இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:

Related posts

இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் கிடையாது – மத்திய அலுவல் மொழித்துறை

Jeba Arul Robinson

மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ்: சிபிஎஸ்இ

எல்.ரேணுகாதேவி

18-45 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும்