பியார் பிரேமா காதல் படத்தின் கூட்டணியில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இயக்குநர் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – ரைசா நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்திருந்தார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘ஸ்டார்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. ரஜினியின் ‘தளபதி’ படத்தின் கதாபாத்திரம் போல ஃபர்ஸ்ட் லுக்கில் காட்சியளிக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.







