ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்டா ப்ளஸ் வகை வைரஸ் தொடர்பாக ஆராய ஆய்வகம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா ஷேஷைய்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “டெல்டா ப்ளஸ் வைரஸ் தொடர்பாக ஆராய புதிய ஆய்வகம் அமைக்கப்படும் என தெரிவித்தார். சட்ட ரீதியாக நீட் தேர்வு பாதிப்புகளை பிரதிபலிக்கவே ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்ட கூறிய அவர், அதற்கு எதிராக பாஜக வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டினார்.







