ஏடிஎம்-ஐ கொள்ளையடிப்பது எப்படி? – 3 மாதங்கள் பாடம் நடத்திய ’ஏடிஎம் பாபா’

பீகாரைச் சேர்ந்த ’ஏடிஎம் பாபா’ என்பவர் உத்தரப்பிரதேச இளைஞர்கள் சிலருக்கு ஏடிஎம்-ஐ எவ்வாறு கொள்ளையடிப்பது என்று 3 மாத பயிற்சி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி…

பீகாரைச் சேர்ந்த ’ஏடிஎம் பாபா’ என்பவர் உத்தரப்பிரதேச இளைஞர்கள் சிலருக்கு ஏடிஎம்-ஐ எவ்வாறு கொள்ளையடிப்பது என்று 3 மாத பயிற்சி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சத்தை திருடியதாக நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9.13 லட்சத்தை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது.

பீகார் மாநிலம் சப்ராவைச் சேர்ந்தவர் சுதிர் மிஸ்ரா. இவர் ‘ஏடிஎம் பாபா’ என்று அழைக்கப்படுகிறார். இவர், 15 நிமிடங்களில் ஏடிஎம்களை எப்படி உடைப்பது, கேமராக்கள் முன்னும், ஏடிஎம் உள்ளேயும் தங்கள் அடையாளங்களை எவ்வாறு மறைப்பது, ஏடிஎம்மில் உள்ள பணப்பெட்டியை உடைத்து, 15 நிமிடங்களுக்குள் பணத்தை கொள்ளையடித்து எப்படி வெளியேறுவது போன்ற பயிற்சியை அளித்து வந்தது, மேற்கண்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படியுங்கள் : இவர்கள் மூவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்! – ஈவிகேஎஸ் இளங்கோவன் உருக்கம்

கைதான இளைஞர்கள் நால்வரும் ஏடிஎம் பாபாவிடம் 3 மாதங்கள் கொள்ளையடிக்க பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சிக்குப் பிறகு 15 நாட்கள் நேரடி செயல் விளக்கமும் பெற்றுள்ளனர். ’ஏடிஎம் பாபா’ சுதிர் மிஸ்ரா பல்வேறு மாநிலங்களில் இருக்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு இவ்வாறு பயிற்சி அளித்து, அதில் தேர்வாகும் இளைஞர்களை ஏடிஎம்-ல் கொள்ளையடிக்க அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.