நண்பனுக்காக இதை கூட செய்யமாட்டேனா என கூறி, மார்க் ஆண்டனி படகுழுவை, நடிகர் விஜய் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இத்திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 06:30 மணிக்கு வெளிவர உள்ளது. இந்த நிலையில், படத்தின் டீஸரை, நடிகர் விஜயிடம் காண்பிக்க விரும்பிய மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படக் குழுவினர், அதற்காக அவரிடம் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டுள்ளனர். நடிகர் விஜய்யும் மறுப்பேதும் தெரிவிக்காமல், உடனே வரும்படி அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து நடிகர் விஷால் உட்பட படக்குழுவினர் தளபதி விஜய்யை நேரில் சந்தித்தனர். அப்போது விஜய் அவர்களுக்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள். மேலும் நடிகர் விஷால், விஜய் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் அவரிடம் வழங்கினார். பின்னர் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீஸரை நடிகர் விஜய்யிடம் படக்குழு போட்டு காண்பிக்க, அதனை பார்த்து மகிழ்ச்சியடைந்த விஜய், படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார். அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷாலிடம் நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதன் பின் தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை துப்பறிவாளன் 2 மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜயிடம் கூறிய விஷால், அதன் பின் தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளதாகவும், தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாகவும் கூறிய போது நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்த்து பயணிப்போம் என்று விஜய் கூறி மேலும் உற்சாக படுத்தினார். இந்த சந்திப்பின் போது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் தயாரிப்பாளர் மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









