திருச்சுழி அருகே வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!

திருச்சுழி அடுத்த செம்போன் நெருஞ்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று சீறிப் பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்கி பரிசுகள் பெற்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அடுத்த செம்பொன்…

திருச்சுழி அடுத்த செம்போன் நெருஞ்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று சீறிப் பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்கி பரிசுகள் பெற்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அடுத்த செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு அரியநாச்சி அம்மன், கருப்பசாமி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் வாயிலாக 536 காளைகள் முன்பதிவு செய்திருந்தனர். இதை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா விழாவை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதற்கிடையே போட்டியில் முதல் காளையாக கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான காளைகள் களத்தில் சீறி பாய்ந்து சென்றன, சீறி பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு,பிடிபடாத காளைகளுக்கு ரொக்க பரிசுகள், கட்டில், மின்விசிறி போன்றவை வழங்கப்பட்டன. விழாவில் பாதுகாப்பு பணிக்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

—-கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.