GOLD RATE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இதனிடையே நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,125-க்கும், சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,000-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.