நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அழகு குத்தியும், அக்னிசட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாரியம்மன் கோயில், பங்குனி திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்தப் பங்குனி உற்சவ திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றம் தொடங்கியதில் இருந்தே நாள்தோறும் அம்மன் ஒவ்வொரு அவதாரத்திலும் சிறப்புஅலங்காரத்தில்
தோன்றிப் பக்தர்களுக்கு நகர்வலம் வந்து அருள்பாவிப்பது வழக்கம்.
உலாவின் முக்கிய நிகழ்வான திங்கட்கிழமை காலை முதலே பக்தர்கள் அம்மனுக்கு தீச்சட்டி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றது.
காளியம்மன் கோயிலில் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள்
வழியாகப் பறை இசை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் மாரியம்மன் கோயிலில் வந்து
நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
—–ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்