முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 12 பேர் கைது

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சரக காவல் கோட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை காவல் கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் சிலர், நாட்டுத்துப்பாக்கிகளை கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவதாக புகார் எழுந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

இதனையடுத்து, நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்போர் அதனை ஒப்படைக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் சிலர், நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இதில், நேற்றைய முன் தினம், நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நேற்று நடைபெற்ற சோதனையில், கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து பேட்டியளித்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி கிருத்திகா, நாட்டுத்துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனத் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்ற தலைமை காவலர்!

எல்.ரேணுகாதேவி

என்னை கொலை செய்ய முயற்சி: அமமுகவினர் மீது கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு!

Ezhilarasan

ரஜினிக்கு ‘தலைவா’ என மோடி ட்வீட், முதல்வர் வாழ்த்து!