முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான விஜய பாஸ்கர், கரூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையானது காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை போன்ற 21 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இத்தகவலை அறிந்த அதிமுக நிர்வாகிகள், விஜயபாஸ்கரின் வீட்டில் கூடினர்.

அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்களை சமர்பித்துவிட்டு சோதனை செய்யுமாறு அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதுபோல சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். விஜயபாஸ்கார் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு எதிராக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

கேம் விளையாடியதை கண்டித்த தந்தை: சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

Gayathri Venkatesan

திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு: ஒபிஎஸ்!

Saravana Kumar

மார்ச் -8 பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10 % தள்ளுபடி: ஜெகன்மோகன் ரெட்டி

Jeba Arul Robinson