முக்கியச் செய்திகள் விளையாட்டு

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி அபார வெற்றி

டி.என்.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று நெல்லை ராயல் கிங்க்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கிடையிலான டிஎன்பிஎல் டி-20 போட்டி நடைபெற்றது.

ரூபி திருச்சி வாரியர்ஸ்

இதில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பாக விளையாடிய அமித் ஷாத்விக் 52 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி வீரர்கள், தொடக்கம் முதலே திணறினர். இதனால், 13.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்து நெல்லை அணி தோல்வி அடைந்தது.

Advertisement:

Related posts

காவிரியில் உபரிநீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Gayathri Venkatesan

பதவியேற்று முதன்முறையாக செய்தியாளர்களை சந்திக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Saravana Kumar

அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கொரோனா!

Jayapriya