இபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உள்துறைதான் முடிவு செய்யும் -அமைச்சர் ரகுபதி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் அருணா ஜெகதீசன் அறிக்கை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உள்துறைதான் முடிவெடுக்கும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் அருணா ஜெகதீசன் அறிக்கை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உள்துறைதான் முடிவெடுக்கும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு வந்துள்ள கோரிக்கை பட்டியல் தொடர்பாக ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சரும் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரகுபதி கலந்து கொண்டு அதிகாரிகளோடு கோரிக்கை மனுக்கள் குறித்த பரிசீலை மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ‘ஆறுமுகசாமி ஆணையத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள துறைகள் அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிப்பார்கள் அவர்கள் அளிக்கக்கூடிய விளக்கத்தை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இதை நாங்கள் அரசியல் ஆக்க பயன்படுத்த மாட்டோம் இது முழுக்க முழுக்க ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொண்டு வருவதற்கான ஆணையம் ஆலயத்தின் அறிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய தக்க அளவில் ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது என பேசினார்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஓபிஎஸ் முதல்வராக இல்லை அவர் பொறுப்பு முதல்வராக தான் இருந்தார். ஜெயலலிதா இறப்பு தொடர்பாக ஒரே ஒரு அமைச்சரை தவிர மற்ற எந்த அமைச்சருக்கும் தொடர்பில்லை என்று ஆணையம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. டிடிவி தினகரன் வரவேற்கத்தக்க அழிக்க என்று கூற மாட்டார் ஏனென்றால் அவர்கள் தான் 10 அறைகளை எடுத்து மருத்துவமனையில் தங்கி இருந்தது சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் ஆறுமுக சாமையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் துறை ரீதியாக விளக்கத்தைக் கேட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை அரசு எடுக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக உள்துறை முடிவு செய்யும் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.