முக்கியச் செய்திகள் தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எய்தவர்களை விட்டு அம்புகள் மீது நடவடிக்கை – கே.எஸ். அழகிரி விமர்சனம்

தூத்துக்குடி கலவர வழக்கில் எய்தவர்களை விட்டு அம்புகள் மீது நடவடிக்கை எடுப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, ‘தூத்துக்குடி கலவரம் வருத்தத்துக்குரியது. போராட்டக்காரர்களுடன் வன்முறை கும்பலும் நுழைந்து விட்டது. வன்முறையாளர்களை கையாளுவது மிகவும் சிரமமான விசயம். அரசு அதிகாரிகள் சிரமப்பட்டு கையாளுகின்றனர். துப்பாக்கி சூடு வரை சென்று இருக்க வேண்டுமா என்பது பலருடைய கருத்து. எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் தான் நடக்கிறது’ என பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்த காரணம் அரசிடம் இருந்து சுட சொல்லி உத்தரவு வந்து உள்ளது. இதில் தண்டனைக்குரியவர்கள் அரசாங்கத்திலிருந்து உத்தரவு தந்தவர்களா அல்லது அந்த உத்தரவை நிறைவேற்றியவர்களா என்பதை பற்றி பொதுவாக சிந்தித்து பார்க்க வேண்டும். துப்பாக்கி சூடு என்பது தவறு என்பதில் மாற்று கருத்தே கிடையாது. ஆனால் சுட்டவர்கள் அவர்களாக சுடவில்லை. அரசாங்கம் சொல்லி சுட்டு உள்ளார்கள்.

இன்றைக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்றால் நாளைக்கு அரசாங்கம் சொன்னால் செவி எடுக்க வேண்டாம் என்று கூறுவார்கள். விசாரணை செய்த நீதிபதி அதையும் யோசித்து இருக்க வேண்டும். குற்றம் அரசாங்கத்துடையது. அப்போது அதிகாரத்திலிருந்தவர்களின் குற்றமே ஒழிய அவர்களின் உத்தரவை நிறைவேற்ற தான் அதிகாரிகள் இருக்கிறார்கள் என கூறினார்.

இது போன் சிக்கலான விசயத்தை தமிழக முதலமைச்சர் மீண்டும் நல்ல முறையில் பரிசீலிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு தேவை, மனிதாபிமானமும் தேவை. ஒரு நிகழ்வுக்கு யார் காரணமோ அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எய்தவர்களை விட்டு அம்பின் மீது நடவடிக்கை சரியானதல்ல. அம்பு என்பது குற்றமற்றது. எய்தவர்கள் எந்த இலக்கை நோக்கி எய்கிறார்களோ அதை நோக்கி செல்லும். அதற்கு வழங்கப்பட்ட உத்தரவும் கடமையும் அது தான். எங்கோ நெருடல் இருக்கிறது. அரசாங்கம் யோசிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: எல்.முருகன் வேண்டுகோள்!

EZHILARASAN D

ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – ஜெயக்குமார்

Halley Karthik

கோடநாடு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

EZHILARASAN D