திருச்செந்தூரில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள அம்பேத்கர் நினைவு பூங்காவில், அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைக்கக் கோரி தலித் மக்கள் மற்றும்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து
வருகின்றனர். மேலும் திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தோப்பூர், கரம்பவிளை, நா.முத்தையாபுரம், நாலுமூலைகிணறு, பிரசாத் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.