முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இந்தியை எதிர்க்க மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் தயாராக இருக்க வேண்டும் – வைகோ பேச்சு

இந்தி இந்தியாவிற்கு ஆட்சி மொழியாக இருக்க தகுதி இல்லாததால் இந்தியை எதிர்க்க மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் தயாராக இருக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை ஒபுளா படித்துறையில் மதிமுக சார்பில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப்போர் தியாகிகள் பிறக்க வேண்டும். இந்தியை எதிர்க்க நமக்கு மொழிப்போர் தியாகிகளின் ஆற்றல் வேண்டும். தமிழ்நாட்டுக்கு மீண்டும் மொழிப்போர் ஆபத்து வந்துள்ளது. தந்தை பெரியார், அண்ணா வழியில் கலைஞர் சிறுவனாக கைகளில் கொடி பிடித்து இந்தியை எதிர்த்தார்.

சுதந்திர தமிழ்நாடு மட்டுமே எங்கள் இலட்சியம் என தந்தை பெரியார் முழங்கினார். இந்தியை எதிர்க்க உயிர்த் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என அண்ணா கூறினார். இந்தியை எதிர்த்ததால் தந்தை பெரியார், அண்ணா சிறைக்கு சென்றார்கள்.

இளைஞர்கள் அரசியலுக்கு வரும்போது பதவி கிடைக்குமா என நினைத்து வரக்கூடாது. மக்களுக்காக இளைஞர்கள் பொது வாழ்வில் ஈடுபட வேண்டும். அரசியல் சட்டத்தை எரித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என கலைஞர், முரசொலி மாறன் சொன்னார்கள்.ஆனால் பதவியை விட திமுகவின் கொள்கை தான் முக்கியம் என கூறி அரசியல் சட்டத்தை எரித்தேன்.

இந்தி இந்தியாவிற்கு ஆட்சி மொழியாக இருக்க தகுதி இல்லாததால் இந்தியை எதிர்க்க அழைக்கிறோம். சனாதன சக்திகளால் மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஆபத்து வந்துள்ளது சனாதனத்தை எதிர்த்து போராட மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் தயாராக இருக்க வேண்டும்.

தமிழ் மேல் காதல் இருப்பது போல் மோடி பேசுகிறார்.தமிழை போற்றுவது உண்மை என்றால் இந்தி இங்கே இருக்க கூடாது. இந்தியை எதிர்க்க வேண்டும் என்றால் இந்துத்துவ சக்திகளை விரட்டி வேண்டும்.

ஆளுநர் ஒரு நாள் தமிழகம் என்கிறார், எதிர்ப்பு வந்ததால் தமிழ்நாடு என கூறுகிறார். தமிழக வரலாற்றில் இப்படி ஒரு மோசமான ஆளுநரை கண்டதில்லை. தமிழ்நாட்டில் சனாதன சக்திகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இந்தியை நுழைய விட மாட்டோம்.” என மதிமுக பொதுச் செயளாலர் வைகோ தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விவேக்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர்கள், ரசிகர்கள் !

Gayathri Venkatesan

உயிரிழந்ததாகக் கூறப்பட்ட அல் கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றி பேச்சு

EZHILARASAN D

தமிழ்நாட்டில் புதிதாக 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு

G SaravanaKumar