முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசால் ரூ.700 முதலீட்டில் தொடங்கப்பட்ட செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் பயன்படாமல் உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரிமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை ஏற்று நடத்த தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக அரசுக்கு குத்தகைக்கு அளித்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை முழு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இதில் பிரதமர் உடனடியாக தலையிட்டு செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தின் சொத்துகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு எழுதிய கடித்தின் நகலை, தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து வழங்கினர்.

அப்போது இதுதொடர்பாக ஒரு வார காலத்திற்குள் பதில் அளிப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் டி.ஆர்.பாலு, செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை ஏற்று நடத்துவதில் தமிழக அரசுக்கு நிதிப் பிரச்சனை இல்லை. இந்த தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவந்தால் ஆறு மாதத்தில் 2 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யமுடியும். இதுதொடர்பாக உடனடியாக பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்” என்றனர்.

Advertisement:

Related posts

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!

Jeba

நாளை வானில் தோன்றும் ‘ரத்த நிலவு’

லாலு சிகிச்சை: ஜார்கண்ட் முதல்வரை சந்திக்கும் தேஜஸ்வி

Saravana