முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒரே நாளில் 11, 416 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம்!

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 11ஆயிரத்து 416 மெட்ரிக் டன் காய்கறிகள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மூலம் வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில், சென்னையில் 5 ஆயிரத்து 483 வாகனங்களில் 2ஆயிரத்து 381 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மற்ற மாவட்டங்களில் 9ஆயிரத்து 25 மெட்ரிக் டன் என மொத்தம் 11ஆயிரத்து 416 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

இலவச நாப்கின்கள் – ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!

Nandhakumar

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை – டி.ஆர். பாலு

Jeba Arul Robinson

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை!

Saravana