சிங்கத்திற்கு உயிர்பயத்தை காட்டிய நீர்யானைகள் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காட்டில் உள்ள எல்லா விலங்குகளுக்கும் ராஜாவாக இருப்பது சிங்கம் தான். சிங்கத்தை பார்த்தால் மற்ற விலங்குகள் அனைத்தும் பயந்து ஓடிவிடும். ஆனால் இந்த வீடியோவில் அந்த காட்டு ராஜாவையே ஓட வைத்துள்ளது நீர்யானை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சிங்கம் ஒரு ஆற்றின் நடுவில் ஒரு பாறையில் சிக்கித் தவிக்கிறது. அந்த பாறையை சுற்றி 10க்கும் மேற்பட்ட நீர்யானைகள் இருகின்றன. திடீரென்று, நீர்யானைகள் சிங்கத்தை சுற்றி வரத் தொடங்குகின்றன.
இதையும் படிக்கவும்: மகளிர் பிரீமியர் லீக்: முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி!
நீர்யானை ஒன்று சிங்கத்தைத் தாக்கி, தண்ணீரில் குதிக்கச் செய்கிறது. உயிர் பிழைத்தால் போதும் என்று சிங்கம் கரையை நோக்கி நீந்துகிறது. அப்போது தண்ணீருக்கு அடியில் மறைந்திருக்கும் மற்றொரு நீர்யானையின் மேல் சிங்கம் மோதுகிறது.
காட்டிற்கே ராஜாவாக இருக்கும் சிங்கத்திற்கு நீர்யானைகள் உயிர்பயத்தை காட்டியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







