முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ் நாடு அமைச்சரவை….!

தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.

தமிழ் நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்ட தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. கூட்ட தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்துவார். கடந்த காலங்களில் அரசு தயாரித்து வழங்கிய உரையின் மீதான ஆளுநரின் முடிவு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டு தமிழ் நாடு அரசின் உரையை சட்ட மன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சட்டமன்றக் கூட்ட தொடருக்கு முன் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன் படி இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் சட்டசபையில் முன்வைக்கப்படவுள்ள முக்கிய அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து  விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும்  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைககள் குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.