கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ராமரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை திருநாளன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் உச்சி பிள்ளையார் கோயிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழ் நாடு அரசு இரு நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் அத்தீர்ப்பில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







