முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்த கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை

கொரோனா தொற்றால் உயிரிழந்த கோயில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க, விவரங்களைக் கேட்டு இந்து சமய அறநிலையத்துறை கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு எழுதிய கடிதத்தில்,

“தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் கோயில் பணியாளர்கள் கோவிட் -19 பேரிடர் காலத்தில் முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றி வந்த கோயில் பணியாளர்களில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அரசு முன்களப்பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்குவதைப் போல், உயிரிழந்த கோயில் பணியாளர்களின் குடும்பத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் நிதியுதவி வழங்கக் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அதன் காரணமாக உதவித் தொகை வழங்கத் தேவைப்படும் முக்கிய ஆவணங்களாக, கோயில் பணியாளர்களின் பணி நியமன ஆணை நகல், கொரோனா காலத்தில் அந்த நபரை பணியமர்த்திய கோயில் நிர்வாகத்தின் உத்தரவின் நகல், உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ், கொரோனா தொற்றால் உயிரிழந்ததிற்கான மருத்துவர் மற்றும் மருத்துவமனை சான்றிதழ் ஆகியவை வழங்க வேண்டும்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அரசுடைமையாக்கப்பட்ட வேதா நினைவு இல்லத்தை தமிழக முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்!

Nandhakumar

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்!

Ezhilarasan

தமிழக வளர்ச்சி படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது- மு.க.ஸ்டாலின்!

Jayapriya