சென்னை புறநகர் மின்சார ரயில்களில் சில கட்டுப்பாடுகளுடன் அனைத்து பயணிகளும் இன்று முதல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் கொரோனாவின் 2 வது அலையை சந்தித்து வருவதால், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கை நீட்டித்தால் மக்களின் வாழ்நிலை பாதிக்கும் என்பதால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த புறநகர் மின்சார ரயில் சேவை இன்று முதல் இயங்க தொடங்கி உள்ளது.
ஆண்களுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாத சாதாரண நேரத்தில், அதாவது காலை 7 மணிக்கு முன்பு வரையிலும், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், இரவு 7 மணிக்கு பிறகு மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் ஆண்களுக்கு, ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ஒரு முறை மட்டும் செல்வதற்கான பயணச்சீட்டு மட்டுமே வழங்கப்படும்.
இந்த விதிகள், விரைவு ரயிலில் வந்திறங்கி புறநகா் ரயிலில் செல்லும் ஆண்களுக்கும், அடையாள அட்டை மற்றும் நிறுவனத்தின் அனுமதிக் கடிதத்துடன் அலுவலகங்களுக்குப் பயணிக்கும் ஆண்களுக்கும் பொருந்தாது.







